1997-ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிகர்கள் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில் வெளியான டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பல கோடி ரூபாயை வசூல் செய்தது.
1912-ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தை மையக் கருவாக எடுத்துக் கொண்டு, அதனுடன் ஜாக் மற்றும் ரோஸ் ஆகிய காதல் ஜோடிகளின் ஆழமான காதல் கதையை சொன்ன விதம், மொழிகளை தாண்டி ஒவ்வொரு சினிமா ரசிகர்களின் மனதிலும் டைட்டானிக் படத்திற்கென ஒரு தனி இடம் கிடைத்தது.
இன்று வரை 2.264 பில்லியன் டாலருக்கு மேல் இந்த படம் வசூல் செய்து உள்ளது. டைட்டானிக் திரைப்படம் மட்டும் மாபெரும் வசூல் செய்யவில்லை, இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மரக் கதவு கூட கோடிக்கணக்கில் வசூல் செய்து இருக்கிறது.
இந்த படத்தின் இறுதிக்காட்சியில் ரோஸ் மற்றும் ஜாக் கதாபாத்திரங்கள் கடலில் மூழ்காமல் இருக்க ஒரு மரக் கதவை பிடித்திருப்பார்கள். இந்நிலையில், தற்போது அந்த மரக் கதவு டெக்சாசில் ஏலம் விடப்பட்ட போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
இதே போல் முன்னதாக உண்மையான டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட உணவு பட்டியல் 84.5 லட்சத்திற்கு ஏலம் போனதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை… சவரன் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை!
500 ரூபாய் நோட்டு குவியலில் படுத்து தூங்கிய அரசியல்வாதி: யார் இவர்?