இந்தியன் 2 வெளியாவதில் சிக்கல்?

சினிமா

இந்தியன்-2 படம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் எதிர்கொண்ட பிரச்சினைகள், வழக்குகளை கொண்டே தனியாக திரைக்கதை ஒன்றை எழுதக்கூடிய அளவிற்கு சம்பவங்கள், சர்ச்சைகள் நிறைந்து இருக்கிறது.

படம் நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜூலை 11) படம் சம்பந்தமான வழக்கு ஒன்று மதுரை மாவட்ட 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர் நோக்கியுள்ளது.

இந்தியன் – 2 படத்தில் தனது அனுமதியில்லாமல் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன்பு நேற்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குனர் ஷங்கர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி, ‘இந்தியன் 2’ படம் வருகிற 12-ந்தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், விரைவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்

அதனுடன், நீதியின் நலன் கருதி இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இந்தியன்-2 படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு!

தரவரிசையில் No.7: தொடரும் ருதுராஜின் ருத்ரதாண்டவம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *