Is the banana story stolen? : Writer So. Dharman's explain

வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!

சினிமா

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை.

தனது சிறுவயது வாழ்க்கை வழியே 1999 ஆம் ஆண்டு நெல்லையில் வாழைத்தார் சுமக்கும் கூலித் தொழிலாளர்கள் 19 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.

படத்தின் இறுதிக்காட்சியை கண்டு திரையரங்கில் இருந்து கலங்கிய கண்களுடன் வெளிவரும் பலரும் படத்தை பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாழை படம் எனது சிறுகதை இன்று வாழை திரைப்படமாக உருவாகி வெற்றி பெற்றுள்ளதை எண்ணி பெருமையடைவதாக சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். ’வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது’ என்று. இன்று படம் பார்த்தேன்.

என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய”வாழையடி……”என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.

இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.

இச் சிறுகதை என்னுடைய “நீர்ப் பழி”என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ’வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்’ என்ற ஒரு சொலவடை உண்டு. ஆனால் என்னை வாழை வாழ வைக்கவில்லை” என்று எழுத்தாளார் சோ. தர்மன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும், “அச்சு ஊடகத்தில் நான் எழுதிய சிறுகதையைதான் வாழையாக எடுத்துள்ளார்கள். அதற்காக நான் உரிமை கொண்டாடவில்லை. சந்தோசப்படுகிறேன்” என்று சோ தர்மன் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

‘கூலி’ – யில் இணையும் சௌபின் சாஹிர்

டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் கைகோர்த்த ரிலையன்ஸ் : சிசிஐ ஒப்புதல்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *