கங்குவா தோல்வி… சூர்யாவுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பு என்ன தெரியுமா?

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ரிலீஸாகி தோல்வியடைந்தது . சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இதற்கிடையே, சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தார். பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் கர்ணா என்ற படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக பேசப்பட்டது. ஜோடியாக கர்ணா மனைவி விருஷாலி கதாப்பாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருந்தார். இது மிகப்பிரம்மாண்டமாக பான்  இந்தியா படமாக இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

ஆனால், கங்குவா வெளியாகி தோல்வியை தழுவியதால் பாலிவுட் படம் கை விடப்படும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கங்குவா படம் வெளியாகி,  இந்தி பேசப்படும் மாநிலங்களில் சூர்யாவுக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை என்பதை காட்டிக் கொடுத்துள்ளது. இதனால், போன பணம் போகட்டும். இனி, சூர்யாவை வைத்து இந்தியில் படம் எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் வந்துள்ளதாக தெரிகிறது.

மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக அந்த படத்தை எடுத்தால் பெரிதாக லாபம் சம்பாதிக்க முடியாது என்பதும் மற்றொரு காரணம் ஆகும்.  இதனால், தேவையில்லாமல் கையை சுட்டுக்கொள்ள வேண்டாம் . இதுவரை செலவு செய்த தொகை போனாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அதானி விவகாரம்… ஸ்டாலினுக்கு ஏன் பதற்றம்? : அன்புமணி கேள்வி!

டெல்டாவில் அதிகனமழை : எந்தெந்த மாவட்டங்களில்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts