நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்து வரும் ரஜினி தொடர்பான படப்பிடிப்புக் காட்சிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வீடியோவை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று (மே 4) வெளியிட்டுள்ளது.
மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் என அனைத்து கதாப்பாத்திரங்களும் காட்டப்பட்டுள்ள இந்த வீடியோவில் கடைசியாக ரஜினி மாஸாக காரில் இருந்து இறங்குவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த வீடியோவில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ’ஜெயிலர்’ வெளியாகும் அதே சமயத்தில், ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலைக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பலத்த எச்சரிக்கையை மீறி வெளியாகிறது ’தி கேரளா ஸ்டோரி’
எடப்பாடி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!