நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 26) சென்னையில் நடைபெற்றது. is sivakarthikeyan act in thalaivar 171
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 21 படத்தின் படப்பிடிப்புகள் 80% நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
SK 21 படத்தில் சிவா ஒரு இராணுவ வீரராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. SK 21 படத்தை தொடர்ந்து SK 23 படம் ஒரு பான் இந்தியா படமாக தயாராக போவதாகவும் கூறப்படுகிறது. SK 23 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போகிறார்.
SK 23 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் மற்றும் நடிகர் வித்யுத் ஜமால் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சிவகார்த்திகேயன், “SK 23 படம் ஒரு பக்கா ஆக்சன் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும், அதே சமயம் பெர்ஃபார்மன்ஸுக்கு ஸ்கோப் உள்ள படமாகவும் இருக்கும்” என்று கூறினார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார் என்று சமீப காலமாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.
இது குறித்து பேசிய சிவா, “தலைவர் 171 படத்தில் நான் நடிக்க வில்லை. நானும் அந்த செய்திகளை பார்த்தேன். தலைவருடன் நடிக்க நான் எப்போதுமே தயார், வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று கூறினார். சிவகார்த்திகேயனின் SK 21 படத்தின் பணிகள் முடிந்த பின் SK 23 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இப்பவாச்சும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா பிக்பாஸ்?… வறுக்கும் ரசிகர்கள்!
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ!
is sivakarthikeyan act in thalaivar 171