வில்லனாகும் லோகேஷ் கனகராஜ்?

Published On:

| By christopher

Is Lokesh Kanagaraj the villain?

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ புறநானூறு ‘ திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக இருக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ கூலி ‘ திரைப்படத்தை இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நடிகை சுருதி ஹாசன் இயக்கி நடித்த ‘ இனிமேல் ‘ எனும் ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் பாடலுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு தான் இயக்கிய ‘ மாஸ்டர் ‘ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சிறிய வேடத்தில் வருவார். அது தவிர்த்து ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் அவராகவே வந்து சிறிய கேமியோ தந்திருப்பார்.

அதைத் தவிர்த்து படங்கள் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார் லோகேஷ் கனகராஜ். பொதுவாக தான் தரும் பேட்டிகளில், தனக்கு நடிக்கத் தெரியாது என்று பதிவு செய்து வருவார் . ஆனால், தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாராகவுள்ள ‘ புறநானூறு ‘ திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜின் ரக்கட் பாய் லுக் தானாம். மேலும், ‘ புறநானூறு ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு வெகு காலம் உள்ளதால், லோகேஷ் கனகராஜ் தற்போது ஏற்றுள்ள ‘ கூலி ‘ திரைப்படத்தை முடித்து விட்டே அதில் இணைவார் எனத் தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

“அர்ஷத் நதீமும் என்னுடைய மகன்தான்”… நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி உருக்கம்!

இனி வெள்ளித்திரையில் எனக்கு பிரேக் இருக்காது: பிரசாந்த் கான்ஃபிடன்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share