இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. is kanguva competing with Indian 2
சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தியன் 2 படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதாவது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 3 படத்திற்காக இன்னும் சில காட்சிகள் தேவைப்படுவதால் அதற்கான படப்பிடிப்பும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தியன் 2 படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதேபோல் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு வரலாற்றுப் பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் கங்குவா படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கங்குவா படத்திற்கான படப்பிடிப்பு கோவா மற்றும் தாய்லாந்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள ஈவிபியில் கங்குவாவின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸாகும் என சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் இந்தியன் 2 படமும் இதே தேதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரம்ஜான், தமிழ் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறைகள் வரும் நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி தான் இந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களையும் வெளியிட சிறந்த நாள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது வரை இது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்தியனுடன் கங்குவா மோத போகிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். is kanguva competing with Indian 2
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பாடல் வெளியீட்டில் சிக்கல்!
தீபாவளிக்கு மழை இருக்கா?: வானிலை நிலவரம்!