நடிகை அம்மு அபிராமி, குக் வித் கோமாளி பிரபலத்தை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் இந்த காதலை உறுதி செய்திருப்பதாக தெரிகிறது.
விஜய் நடித்த ‘பைரவா’ உட்பட சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்த நடிகை அம்மு அபிராமிக்கு திருப்புமுனையாக ‘ராட்சசன்’ படம் அமைந்தது. அதன் பின் ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து கலக்கி இருந்தார்.
இந்த நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மு அபிராமி, அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார்.
இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்த பார்த்திபனுக்கும் அம்மு அபிராமிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பார்த்திபனின் பிறந்தநாளில் அவருடன் சேர்ந்து பாடல் கேட்பது போல வீடியோவை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை நடிகை அம்மு அபிராமி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் ‘பிறந்ததற்கு நன்றி.. வாழ்வில் வந்ததற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுகவை வீழ்த்தியிருக்க முடியுமா?
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா