நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து அறிவிப்புக்குப் பின் மீண்டும் இணைய இருப்பதை அறிவிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கணவன் மனைவி என்ற உறவிலிருந்து பிரிய இருப்பதாக அறிவித்தனர். இவர்களின் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்தது. அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இயக்குநர் பணியிலும், தனுஷ் ஹாலிவுட் பாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் மாறி மாறி இருந்து வருகின்றனர். இருவரும் தங்கள் பிரிவை அறிவித்த பிறகு இணைந்து வாழ வேண்டும் என குடும்பத்தில் பலரும் முயற்சிகள் எடுத்ததாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் செய்தி வெளியானது.
இது மட்டுமில்லாமல் சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள இருவருக்கும் சொந்தமான அடுக்குமாடிக்குடியிருப்பில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் மீண்டும் இணைந்து வாழ்வதற்காக ஐஸ்வர்யாவிடம் அழைப்பு விடுத்திருக்கிறார். இதனை ஐஸ்வர்யா ஏற்று இருப்பதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.
இதனை அடுத்து வரும் நவம்பர் மாதம் இவர்களது திருமண நாள் அன்று இந்த செய்தியை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சினிமாவிலேயே இன்னொரு தரப்பினர் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்கிறார்கள்.
ஆதிரா