நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப் போவதாக அவ்வப்போது தகவல் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் மும்பை ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த வீடியோ ஒன்று பரவி வைரலானது. வீடியோவில் முழுவதுமாக கவர் செய்யப்பட்ட கருப்பு நிற கவுன், கருப்பு நிற ஓவர் கோட் அணிந்த படி, மகள் கையை பிடித்தபடி ஐஸ்வர்யா நடந்து வந்தார். கணவர் அபிஷேக் பின்னால் நடந்து வருவது போல அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. குடும்பத்துடன் நியூயார்க் சென்று விட்டு மும்பை திரும்பி வந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது.
இந்த வீடியோவை பார்த்து விட்டு பலரும், ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா? என்று அப்போது கேட்டு கொண்டிருந்தனர் . தற்போது, ஐஸ்வர்யா தன் மகள் ஆராத்யா வயிற்றில் இருந்த புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் பரப்பி, இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். தற்போது, 50 வயதான ஐஸ்வர்யா கொஞ்சம் எடை போட்டிருக்கிறார். மேலும், உடல்ரீதியான பாதிப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனுடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த நிலையில், 2007 ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2011 ம் ஆண்டு ஆராத்யா என்ற மகள் பிறந்தார். தற்போது, ஆராத்யாவுக்கு 13 வயதாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” : அமைச்சர் உறுதி!
90 களில் நாட்டை உலுக்கிய நாவுக்கரசு கொலை வழக்கு… கொலையாளி ஜான் டேவிட்டுக்கு ஜாமீன்!