காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் செல்வராகவன். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ’நானே வருவேன்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன்பிறகு இயக்குனர் செல்வராகவன் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். பீஸ்ட், சாணிக் காகிதம், மார்க் ஆண்டனி என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த செல்வராகவன் தற்போது ரவி தேஜாவின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
இதற்கிடையில் செல்வராகவன் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் 7 ஜி ரெயின்போ காலனி 2 படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக ரவி கிருஷ்ணா நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக அனஸ்வர ராஜன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது முடிந்துவிட்டது என்றும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது என்றும் சமூக வலைதளத்தில் ஒரு புதிய செய்தி வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அமானுஷ்ய கிராமம்… போராடும் ஆர்யா: தி வில்லேஜ் ட்ரெய்லர் எப்படி?