உலகளவில் புகழ்பெற்ற “அயன்மேன்” கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், மார்வெலின் ’டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகமாகிறார்.
ஹாலிவுட்டில் பிரபல நிறுவனங்களில் ஒன்று மார்வல் ஸ்டூடியோஸ். இதன் “அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே” நிகழ்ச்சி சான் டியாகோ காமிக்-ஆன் 2024 இன்று (ஜூலை 28) நடைபெற்றது.
இந்த காமிக்- ஆன் நிகழ்வில் மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் “டாக்டர் டூம்” படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி நிகழ்ச்சி நடைபெற்ற ஹால் ’H’க்குள் முகமூடியுடன் வந்த ராபர்ட் டவுனி ஜூனியர், அதனை அகற்றியதும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.
தொடர்ந்து டாக்டர் டூம் கதாப்பாத்திரத்தில் நடிப்பதை ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மார்வல் ஸ்டூடியோஸ் தலைவர் கெவின் ஃபெய்க் இருவரும் உறுதி செய்தனர்.
அயன்மேன் மற்றும் மார்வெல் சினிமேடிக் யூனிவர்ஸில் கதாநாயகனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் டாக்டர் டூம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறுகிறார்.
இதுகுறித்து பேசிய ஆர்.டி.ஜே, “சிக்கலான கேரக்டர்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் புகழ்பெற்ற மார்வல் யூனிவர்சில் அதிக ரசிகர்களை கொண்ட ராபர்ட் டவுனி ஜூனியர், மீண்டும் அதில் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’காவிரி நீர்த்திறப்பிற்கு முன் இத செய்யுங்க’: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்!
ராயன் படத்தால் கைதான தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின்!