தமன்னா, ராஷ்மிகா ஆட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல் திருவிழா!

சினிமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 31 ) கோலாகலமாகத் தொடங்கியது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் திருவிழாவை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மந்திரா பேடி தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.பாலிவுட் பாடல், வந்தே மாதரம் பாடல் பாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.

ஆலியா பட் நடித்த ராஸி படத்தில் தான் பாடிய ‘Ae Vata’n என்ற பாடலை பாடினார். அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியை ஹர்திக் பாண்டியா மைதானத்தில் நின்றபடி ரசித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமன்னா தமிழ் பாடலுக்கு நடனம் ஆடினார்.

IPL festival started with Tamannaah and Rashmika

’மால டம் டம், மஞ்சர டம் டம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா, தொடர்ந்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற ’ஊ ஆண்டவா, உ ஊ ஆண்டவா’ பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

IPL festival started with Tamannaah and Rashmika

தமன்னாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. குஜராத் டைட்டன்ஸுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தனது நடிப்பில் வந்த புஷ்பா படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதன் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல், புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீ வல்லி பாடலுக்கும் டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

IPL 2023: சிஎஸ்கே…பலம்? பலவீனம்?

10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *