இந்திய சினிமாவில் திரைக்கலைஞர்களின் வாரிசுகள் எல்லா மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் மூன்றாவது தலைமுறை நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளது என். டி.ராமராவ் குடும்பம்.
தெலுங்கு சினிமா சில குறிப்பிட்ட குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்கிற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
புதிய நடிகர்கள் அறிமுகமாகி வளர்ந்து வந்தாலும் குடும்பங்களின் ஆதிக்கத்தை கடந்து பெரிதாக வெற்றி கொள்ள முடிவதில்லை. என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி குடும்பம் என அவர்களது குடும்பத்தில் இருந்து வாரிசுகள் முன்னணி நடிகர்களாக தற்போது இருக்கிறார்கள்.
தற்போது என்.டி.ராமாராவ் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை நடிகராக என்டிஆரின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமூரி தாரக ராம மோக்ஷக்ன்யா தேஜா நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ‘சிம்பா’ என்ற படத்தில் மோக்ஷக்ன்யா நடிகராக அறிமுகமாகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
முன்மாதிரியான தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி எங்கே? : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
ரூ.12,381 கோடி வாடகை பாக்கி… கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல்!