நடிகர் மம்மூட்டியின் காதல் தி கோர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மம்மூட்டியின் பிரமயுகம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
‘பிரமயுகம்’ படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கிறார். பூதகாலம் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராகுல் சாதசிவனுடன் மம்மூட்டி இணைந்தது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆல் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.
சமீபத்தில் வெளியான பிரமயுகம் படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று (ஜனவரி 11) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரமயுகம் படம் முழுக்கவே கருப்பு வெள்ளை வண்ணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பூதகாலம் படத்தை போலவே பிரமயுகம் படமும் ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கிறது. டீசரின் இறுதி காட்சியில் விளக்கு நெருப்பை அணைக்கும் போது மம்மூட்டி கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மிரட்டல்.
கூடிய விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
திமுகவுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பிரேமலதா
பெண் குழந்தை பிறப்பதற்கு யார் காரணம்?: நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த நீதிபதி!