“எங்களுக்கு இத்தனை வயது தான் வித்தியாசம்” – உண்மையை உடைத்த இந்திரஜா சங்கர்..!

சினிமா

விஜய் டிவி பிரபலமும், காமெடி நடிகருமான ரோபோ சங்கரின் மகள் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

அவரது மகள் இந்திரஜா சங்கர் தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தில் பாண்டியம்மாவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதன் பிறகு தெலுங்கில் ‘பாகல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பின்பு ‘விருமன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை இந்திரஜா தனது தாய் மாமாவான கார்த்திக்கை மணமுடித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

வரவேற்பு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, செந்தில் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இவரது கணவரான கார்த்திக் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

29 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது இந்த நல்ல செயல் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் 15 வயது வித்தியாசம் என்று இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இதற்கு இந்திரஜா சங்கர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறும் போது, “இந்த கேள்வியை கேட்டாலே கடுப்பாகுது.

யார் அப்படி சொன்னது? எங்கள் இருவருக்கும் 9 வயது தான் வித்தியாசம். எங்களுக்குப் பிடித்திருந்தது திருமணம் செய்து கொண்டோம்.

இதில் கேள்வி எழுப்ப என்ன இருக்கிறது”, என்று கோபமாக பதில் அளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘யார் என்ன சொன்னால் என்ன?

உங்களுக்கு பிடித்திருந்து தான் திருமணம் செய்து கொண்டீர்கள். வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள்’ என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவையில் தமிழகத்தின் பலத்தை குறைக்க சதி: மோடியை சாடிய ஸ்டாலின்

Gold Rate: வரலாறு காணாத உச்சம்… சவரன் ரூ.54,960க்கு விற்பனை

மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்?

+1
3
+1
0
+1
3
+1
5
+1
4
+1
4
+1
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *