ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ராஜமௌலி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 29ஆவது படத்தை இயக்குவார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
ராஜமௌலி இயக்க இருக்கும் ‘SSMB 29’ படத்தின் படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. SSMB 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. SSMB 29 படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’ கதைக்களத்தை போன்ற புதையல் தேடிச் செல்லும் அட்வென்ஜர் பேண்டசி படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை ‘செல்சியா இஸ்லன்’ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. சமீபத்தில் SSMB 29 படத்திற்காக நடிகை செல்சியா இஸ்லனுக்கு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை தீபிகா படுகோனேவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
ஜனவரி மாதம் இறுதியில் ’SSMB 29’ படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தொடர் விடுமுறை: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!