கடந்த 20 வருடங்களாக இந்திய சினிமாவில் ஏ.ஆர். ரஹ்மான்தான் முதலிடத்தில் இருந்தார். ஒரு படத்துக்கு இசையமைக்க பல கோடிகளில் சம்பளம் வாங்கினார். ஆனால், 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு, இளம் இசையமைப்பாளர் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மானை முந்தி விட்டார். இவர், ஒரு படத்துக்கு இசையமைப்பதற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குகிறார் அந்த இசையமைப்பாளர். அவர், வேறு யாருமல்ல அனிருத் ரவிச்சந்தர்தான்.
ஜெயிலர், பீஸ்ட், மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்திருந்தார். கடந்த 2023 ஆம் அண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்துக்கும் அனிருத் இசைதான். இதுதான், அனிருத்தின் முதல் பாலிவுட் படமாகும். இந்த படத்துக்கு அனிருத் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் ஒரு படத்துக்கு 7, 8 கோடிதான் சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ, ஜெயிலர் போன்ற படங்களுக்கு இசையமைக்க அனிருத் ரூ.8 கோடி சம்பளம் வாங்கியதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசைக்கென புதிய உத்தியை கடைபிடித்து பின்னணி இசை கொடுப்பதில் தனித்தன்மையுடன் இருப்பதால் அனிருத் பெரிய நடிகர்கள், இயக்குநர்களை கவர்ந்துள்ளார். இதனால், அவருக்கு சம்பளம் கொடுக்க யாரும் தயங்குவது இல்லை. தற்போது, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் முதலிடத்தில் உள்ள அனிருத்தின் வயது 33 .
பிரீதம் , விஷால் சங்கர், கீரவாணி, யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.