கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் அண்மையில் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், கமல் அடுத்து எந்தப் படத்தில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
தொடர்ந்து, கொரோனா பாதிப்பின் காரணமாகவும், விபத்து காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
அனிருத் இசையமைப்பில், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், இன்று (ஆகஸ்ட் 24) 12.01 மணியளவில், வெளியிட்டுள்ளனர்.
செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
இந்தியன் 2 படத்தில் கார்த்திக்?