இந்தியன் 2 : கமல் வீடியோவை வெளியிடும் ரஜினி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் இந்தியன்.
இந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் ஷங்கரும் கமல்ஹாசனும் எப்போது இணைந்து ஒரு புதிய படத்தை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பிறகு 21 ஆண்டுகளுக்குப் பின் 2017ஆம் ஆண்டில் மீண்டும் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணி இந்தியன் 2 படத்திற்காக இணைவதாக அறிவிக்கப்பட்டது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பிற்கு இடையே பல தடைகள் வந்தாலும், ஒரு வழியாக முழு படப்பிடிப்பும் தற்போது முடிந்து விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் நாளை (நவம்பர் 3) மாலை 05.30 மணிக்கு வெளியிடுவார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து வெளியிடப்பட்ட போஸ்டரில் ரஜினிகாந்தின் விண்டேஜ் ஸ்டில் இடம் பெற்றுள்ளது செம மாஸ். ரஜினியின் தலைவர் 170 படத்தையும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
மேலும் இந்தியன் 2 அறிமுக வீடியோவின் தெலுங்கு வெர்ஷனை பிரபல இயக்குனர் ராஜமௌலி வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதாவது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளியாகும்.
இந்தியன் 3 படத்திற்கு இன்னும் சில காட்சிகள் தேவைப்படுவதால் அதற்கான படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சங்கரய்யா விவகாரம்: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்!
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!
சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!