இந்தியன் 2 படம் ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்க புதிய நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‛இந்தியன் 2‘ 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
படம் முடிவடையும் குழலில் நடைபெற்ற படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின் கொரோனா பொது முடக்கம் காரணமாக எல்லா தொழில்களும் முடங்கியது போன்று சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.
கொரோனா தடைகள் நீக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் இந்தியன் – 2 படத்தை முடித்துக் கொடுப்பதில் தயாரிப்பு நிறுவனத்துடன் கமல்ஹாசன், ஷங்கர் இருவருமே முரண்பட்டு நின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் வேளையில் வெளியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தயாரிப்பில் உதயநிதியும் பங்குதாரராக இணைந்ததால் தற்போது இந்தியன்-2 படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது.
ரூ.100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட விக்ரம் திரையரங்குகளில் ரூ.500 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது. அதனை தொடர்ந்து வந்த பொன்னியின் செல்வன் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தியன்-2 படம் வெற்றிபெறுவதுடன் வசூலில் ரூ.1000 கோடி ரூபாய் சாதனை நிகழ்த்தவேண்டும் என்பதற்காக படத்தில் புதிய நடிகர்கள் பிற மொழிகளில் இருந்து இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகிய 7 பேர் வில்லன்களாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தனுஷ்கோடி அருகே பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளனர். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாகவும், ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெறும் வகையிலும் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனும் இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.
இராமானுஜம்
உயிரை பறித்த செல்போன்… ரயில் மோதி பலியான மாணவி!
ஆதார் – மின் இணைப்பு: கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?