1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு பின் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.
2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படம் பல தடைகளுக்கு பின் 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அறிமுக வீடியோ இன்று (நவம்பர் 03) வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ இந்தியன் முதல் பாகத்தின் இறுதி காட்சியில் இருந்து தொடங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதிகரிக்க தொடங்கிவிட்டதால் இந்தியன் மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் #COMEBACKINDIAN என பதிவிடுகிறார்கள். மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட மீண்டும் இந்தியன் வருகிறார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஷங்கரின் பிரமாண்டம் தெரிகிறது. ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!
திருமணமான 3 நாளில் காதல் ஜோடி கொலை: பெண்ணின் தந்தை கைது!