இந்தியன் 2 : லைகா வெளியிட்ட வீடியோ!

Published On:

| By Kavi

Indian 2 Glimpse of Dubbing

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் இந்தியன்.

இந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் ஷங்கரும் கமல்ஹாசனும் எப்போது இணைந்து ஒரு புதிய படத்தை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு 21ஆண்டுகளுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் மீண்டும் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணி இந்தியன் 2 படத்திற்காக இணைவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் தள்ளிப்போனது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

அதன் பிறகும் இந்த படத்திற்கு பல தடைகள் ஏற்பட்டாலும் ஒரு வழியாக முழு படப்பிடிப்பும் தற்போது முடிந்து விட்டது.

படப்பிடிப்பு முடிந்த பின் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.

அதாவது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கான டப்பிங் பணிகளை படக்குழுவினர் தொடங்கி விட்டனர்.

இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 அப்டேட்ஸ், லால் சலாம் படத்தின் அப்டேட்ஸ், நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி பட அப்டேட்ஸ் என பல அப்டேட்களை இந்த மாத தொடக்கத்திலேயே அள்ளி வீசியுள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,

தற்போது கமல் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்தியன் 2 அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

உலகநாயகன் கமலஹாசனும் இந்தியன் 2 படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கி விட்டார்.

உலகநாயகன் கமலஹாசன் மாஸாக காரில் வந்து இறங்கி இயக்குனர் ஷங்கரை சந்தித்துவிட்டு, டப்பிங் ஸ்டூடியோவிற்குள் நுழைந்து டப்பிங் பேச தொடங்கியதை ஒரு Glimpse வீடியோவாக எடுத்து லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணி!

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel