நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்திற்காக தொடர் படப்பிடிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் தலைவர் 170 படத்தை இயக்குகிறார். தலைவர் 170 படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர் என இந்தியாவின் பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினி தலைவர் 170 படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் விடை பெற்றுக் கொண்டு குஜராத் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.
தற்போது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிவிட்டது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்காக தான் நடிகர் ரஜினி குஜராத் செல்கிறார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் நடிகர் ரஜினிக்கு பிசிசிஐ சார்பில் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியை காண நடிகர் ரஜினியுடன் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா