ind vs aus final selvaraghavan tweet

இந்தியா தோற்பதை பார்க்க முடியவில்லை: செல்வராகவன் உருக்கம்!

சினிமா

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்ற வலியை சொல்ல இயலாது என்று இயக்குனர் செல்வராகவன் இன்று (நவம்பர் 20) தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்திருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

உலக கோப்பை அனைத்து லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காத இந்தியா, இறுதிப்போட்டியில் நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் நம்பிக்கை என்பது கடைசி வரை தொடர்ந்தது. இந்திய அணி தோல்வி அடைந்ததை ரசிகர்கள் பலரும் உணர்வுப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், இந்திய அணி தோற்றதும் தாம் அழுததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல.

என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வராகவனின் ட்விட்டர் பதிவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

Bigg Boss 7 Day 49: கைதட்டல் கேட்டு புலம்பிய பூர்ணிமா

ஹெல்த் டிப்ஸ்: கண்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்?

பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *