தயாரிப்பாளர் அன்புச்செழியனை தொடர்ந்து கலைப்புலி தாணுவின் தி.நகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், கபாலி,அசுரன் உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தந்த கலைப்புலி தாணுவின் தி.நகர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும், சினிமா பைனான்சியராக உள்ள அன்புச்செழியன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது கலைப்புலி தாணுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வேறு சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரி சோதனை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- க.சீனிவாசன்
எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை : புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு..? பாடகி தீ விளக்கம்!