1993 ல் இளையராஜா இயற்றிய சிம்பொனி வெளிவராதது ஏன்? மேற்கத்திய விமர்சகர்கள் செய்த அந்த காரியம்!

Published On:

| By Kumaresan M

இசைமைப்பாளர் இளையராஜா லண்டன் ஈவென்டிம் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று (மார்ச் 8) தனது வலியன்ட் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இவரது இசைக்குறிப்புகளுக்கு Royal philharmonic orchestra குழுவினர் இசை வடிவம் கொடுத்தனர். ஆனால், இளையராஜா சிம்பொனி இசையமைப்பது இது முதல் முறையல்லல. ilayaraja’s old symphnoy in 1993

கடந்த 1993 ஆம் ஆண்டு இதே குழுவினருடன் சேர்ந்து சிம்பொனி ஒன்றை இளையராஜா பதிவு செய்தார். பொதுவாக சிம்பொனி என்பது மேற்கத்திய கிளாசிக்கல் இசை ஆகும். இளையராஜா தனது சிம்பொனியில் சில இந்திய இசைக்கருவிகளையும் சேர்த்திருந்தார். இதனால், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த விமர்சகர்கள் அதை சிம்பொனி என ஏற்றுக் கொள்ளவில்லை .

அந்த சிம்பொனியை இளையராஜா இசைத்த போது, பிரிட்டிஷ் கம்போஷர் ஜான் ஸ்காட்தான் கண்டக்டராக இருந்தார்.இவர், ரிச்சர்ட் டொனர், நார்மன் ஜே.வார்னர் , மைக் ஹாட்ஜஸ், ஹட்சன் போன்ற புகழ் பெற்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் பணியாற்றியவர்.

மேற்கத்திய இசை வல்லுநர்களின் விமர்சனம் காரணமாக 1993 ஆம் ஆண்டு தான் இயற்றிய சிம்பொனியை வெளியிட இளையராஜா மறுத்து விட்டார்.

இது குறித்து இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஜான் ஸ்காட்டிடம் ஒரு முறை கேள்வி எழுப்பிருந்தார். அப்போது, ஜான் ஸ்காட் கூறியதாவது, ‘முதல் சிம்பொனி இசைக்க வந்த போதே எனக்கு இளையராஜா நெருங்கிய நண்பராகி விட்டார். விமர்சனங்கள் வந்த போதும், நான் அந்த சிம்பொனியை டி.வி.டி , சி.டி- யாக வெளியிட வற்புறுத்தினேன். ஆனால், எழுந்த விமர்சனங்கள் காரணமாக அதை வெளியிட இளையராஜா மறுத்து விட்டார். இசை விமர்சகர்கள் என்ற பெயரில் இசையமைப்பாளர்களை அழிக்க நினைப்பவர்கள் பற்றி நிக்கோலஸ் ஸ்லோனிம்ஸ்கி எழுதியுள்ள “LEXICON OF MUSICAL INVECTIVE” என்ற அற்புதமான புத்தகத்தில் பல விஷயங்களை கூறியுள்ளார். இது பீத்தோவன் காலத்திலிருந்தே இருந்துள்ளது . விதிவிலக்கே இல்லாமல் இசை விமர்சகர்கள் பலரும் சிறந்த இசையமைப்பாளனை காணாமல் போக செய்துள்ளனர்” இவ்வாறு ஜான் ஸ்காட் தெரிவித்திருந்தார். ilayaraja’s old symphnoy in 1993

முதல் சிம்பொனி அமைக்கப்பட்ட போது விமர்சனங்கள் எழுந்ததால், வேலியன்ட் சிம்பொனிக்கு குறிப்புகள் எழுதும் போது, இளையராஜா கிஞ்சித்தும் கூட இந்திய இசை கலந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ‘ஒரு இந்தியன் வந்தான் இந்திய இசையை வாசித்து விட்டு போய் விட்டான்’ என்று கூறி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். வேலியன்ட்டுக்காக குறிப்புகள் எழுதும் போது, தன்னை ஒரு இந்தியனாகவோ தமிழராகவோ உணர்ந்து கொள்ளாமல் இருந்து இசை குறிப்புகளை எழுதினேன்” என ஒரு பேட்டியில் இளையராஜா கூறியிருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share