35 நாட்களில் சிம்பொனி: ரசிகர்களுக்கு ராஜா சொன்ன குட் நியூஸ்!

Published On:

| By Selvam

கடந்த 35 நாட்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்று இளையராஜா இன்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம். நான் தினமும் கேள்விப்படுறேன், என்னைப்பற்றி எதோ ஒரு வகையில நிறைய வீடியோக்கள் வந்துக்கிட்டு இருக்குன்னு வேண்டியவர்கள் சொல்வார்கள்.

நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துறதில்லை. மத்தவங்கள கவனிக்கிறது என்னுடைய வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிக்குறது தான் என்னுடைய வேலை.

நான் என் வழியில ரொம்ப கிளீனா சுத்தமா போய்க்கிட்டு இருக்கேன். நீங்க என்னை வாழ்த்திக்கொண்டிருக்கிற நேரத்திலே, கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். இங்கே ஃபிலிம் சாங்ஸும் எடுத்துவிட்டு, சில விழாக்களுக்கும் சென்று தலையை காட்டிவிட்டு வந்துவிட்டேன்.

இதெல்லாம் நடந்துகொண்டிருந்தாலும், கடந்த 35 நாட்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

ஏனென்றால் ஃபிலிம் மியூசிக் என்பது வேறு, பேக்ரவுண்ட் மியூசிக் என்பது வேறு, இதெல்லாம் அதில் ரெப்ளக்ட் ஆகியிருச்சுன்னா, அது சிம்பொனி கிடையாது.

ஒரு பியூர் சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவோவின் பிளாக்பஸ்டர் 5ஜி: அப்படி என்னய்யா போன் அது ?

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசில் ராதிகா புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel