மறைந்த இயக்குநர் மனோபாலாவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக இன்று (மே 3) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ள இளையராஜா, “என்னிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த நண்பர் இயக்குநர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன்.
மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும், பாரதிராஜாவிடம் உதவியாளராகவும் பணிபுரிந்தார். பின்னால் தானே படங்களை இயக்கினார். எல்லா காலங்களிலும் என்னை சந்தித்து வந்தவர்.
நான் வீட்டில் இருந்து கிளம்பி கோடம்பாக்கத்தைத் தாண்டுகிற சமயத்தில், காரில் பார்ப்பதற்காகக் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்.
நடிகரானாலும், இயக்குநரானாலும் என்னிடம் வந்து ரெக்கார்டிங் சமயத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லிச் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர்” என்று நினைவுகூர்ந்துள்ளார்.
பிரியா