லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 9) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். Ilaiyaraaja orchestra symphony london
கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில், லண்டனில் சிம்பொனி அரங்கேற்றுவதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து இளையராஜா லண்டன் சென்றார். வேலியன்ட் என்று பெயரிடப்பட்ட சிம்பொனியை லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் இளையராஜா அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்தனர். இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் முடிந்ததும் ரசிகர்கள் கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
மொத்தம் 3,665 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. கடந்த இரண்டு நாட்களாகவே இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தொடர்புடைய பதிவுகள், வீடியோக்கள் பலவற்றை பதிவேற்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Ilaiyaraaja orchestra symphony london