தளபதி விஜய் படத்தில் இசைஞானி இளையராஜா இணைந்துள்ளதாக, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தன்னுடைய கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ‘GOAT’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் – மீனாட்சி சௌத்ரி இருவரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்லவிருக்கின்றனர்.
இந்தநிலையில் இப்படத்திற்காக இளையராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஏற்கனவே விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறார். தற்போது இளையராஜாவையும் யுவன் பாட வைத்துள்ளார். இதேபோல கங்கை அமரனும் இப்படத்தின் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற மே மாதம் வெளியாகவிருக்கிறது. படம் விஜயின் 5௦-வது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூன் மாதம் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் விஜய் மீசை, தாடி எல்லாம் எடுத்துவிட்டு கிளீன் லுக்கில் இருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும்போது இளம்விஜய் தொடர்பான காட்சிகளை வெங்கட் பிரபு எடுத்து வருவதாக தெரிகிறது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ரீ-என்ட்ரி கொடுத்து இப்படத்தில் நடித்து வருகின்றனர். அதோடு மறைந்த கேப்டன் விஜயகாந்தினையும் படக்குழு ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நடிக்க வைத்துள்ளனர்.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் குறித்த அப்டேட்டினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!
மீண்டும் அமைச்சராகும் பொன்முடி… ஆளுநருக்கு கடிதம்?