நகைச்சுவை நடிகராக தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இச்சூழலில், இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சினிமா விகடனில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் நடிகர் சிம்புவுக்கும் தனக்கும் இடையேயான நட்பை பற்றி பேசியுள்ளார் நடிகர் சந்தானம்.
அப்போது அவரிடம், நடிகர் சிம்புவை சமீப காலங்களில் எப்போது பார்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் சந்தானம், ”சிம்புவை அண்மையில் அவர் வீட்டில் தான் பார்த்தேன். அவர் இப்போதெல்லாம் அதிமான கடவுள் நம்பிக்கையில் இருக்கிறார். எப்போது பார்த்தாலும் தியானம் செய்து கொண்டிருக்கிறார்.
“நான் சினிமாவுக்கு வந்ததற்கு காரணம் சிம்பு தான். அவர் இல்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை.
அவர் தான் தொலைக்காட்சிகளில் நடித்து கொண்டிருந்த என்னை ’மன்மதன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் கவுண்டமணியும் இருந்தார். எனக்கு அப்போது பெரிய நடிகர்கள் எல்லாம் நடிக்கிறார்களே என்று மனதில் ஒரு பதட்டம் இருந்தது ஆனால் சிம்பு தான் பயப்பட வேண்டாம் எதார்த்தமாக நடியுங்கள் என்று சொன்னார்.
அதன்பிறகு எஸ்.ஜே. சூர்யா நடித்த ’அன்பே ஆருயிரே’ படத்திலும் சிம்பு தான் என்னை பரிந்துரை செய்தார்.
அதில் இருக்கு ஆனா இல்ல என்ற அந்த காமெடி நன்றாக பெயர் வாங்கியது.
தொடர்ந்து ’வல்லவன்’ என அடுத்தடுத்து சிம்புவின் படங்களில் நடித்து வந்தேன். ’வானம்’ என்ற படத்தில் நானும் சிம்புவும் இணைந்து நடித்தோம்.
அந்த நேரத்தில் தேதி கொடுக்க முடியாத அளவுக்கு நான் பிஸியாக இருந்தேன். எனக்காக நைட் ஷூட் போட்டு நான் எப்பவெல்லாம் மத்த படத்தோட ஷூட் முடிச்சிட்டு சும்மா இருக்கேனோ அப்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்துவார்கள். பின்னர் ஹைதராபாத் கூட்டிச் சென்று எடுத்தார்கள்.
நான் கதாநாயகன் ஆன் பின்னரும் கூட, நீ ஒருபக்கம் எங்க கூட படம் பண்ணலாம் என சொல்லுவார் சிம்பு. முன்பெல்லாம் நங்கள் சந்தித்துக் கொண்டால் படங்கள் பற்றித்தான் பேசுவோம். ஆனால் இப்போதெல்லாம் அதிமகாக ஆன்மீகம் பற்றி தான் பேசுகிறோம்.
சிம்புவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் சித்தர்கள், சாமியார்களை சந்திப்பது, திருவண்ணாமலை போவது என இந்த அளவிற்கு மாறுவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தன் படங்களில் சிவன் உள்ளிட்ட விஷயங்களை இடம் பெற செய்கிறார்.
ஆனால் சிம்புவுக்கு முன்னரே எனக்கு ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் நடிகர் ரஜினி தான். நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். நான் சின்ன வயதில் அவர் படங்களை பார்க்கும் பொழுது அதில் பட்டை, ருத்ராட்சம் அணிந்து இருப்பார். அதை எல்லாம் பார்த்து தான் எனக்குள் ஆன்மீக ஈடுபாடு வந்தது.
யூடியூபில் உள்ள வீடியோக்களை எல்லாம் பார்த்து சிம்புவே தன்னை குருவாக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். நான் சத்குருவை குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன்” என்றார்.
பின்னர், டி ராஜேந்தர் குறித்து பேசினார் சந்தானம். அதில்” வீராசாமி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை டி.ரஜேந்தர் அழைத்தார்.
நீ சிம்பு உடன் மட்டும் தான் நடிப்பாயா என்னுடன் நடிக்க மாட்டாயா என்று கேட்டார். அதற்கு நான் உங்களுடன் நடிக்கிறேன் என்று சொன்னேன்.
அப்போது தான் நான் வீராசாமி படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு தளங்களில் டி.ராஜேந்திரர் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொடுக்கும் போது நாம் சரியாக கவனிக்கவில்லை என்றால் மிகவும் கோபப்படுவார்” என்று கூறியுள்ளார் நடிகர் சந்தானம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மழையில் நனையும் கீர்த்தி ஷெட்டி: வைரல் புகைப்படம்!
செந்தில் பாலாஜி இல்லாத முதல் அமைச்சரவை கூட்டம்!