சித்தா பட ப்ரோமோஷனுக்காக நடிகர் சித்தார்த் கர்நாடகாவிற்கு சென்றபோது அந்த ப்ரோமோஷன் விழாவில் காவேரி நதிநீர் பிரச்சனையை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் இடையூறு செய்து நடிகர் சித்தார்த்தை வெளியேறுமாறு கூறினர்.
இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சித்தார்த்தை வெளியேற்றியதை கண்டித்து, கன்னட மக்கள் சார்பாகவும் கன்னட நடிகர்கள் சார்பாகவும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
இந்த சர்ச்சைக்குப் பிறகு வெளியான சித்தா படம் அனைவரின் பாராட்டுகளை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
தற்போது இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த். ப்ரோமோஷனில் நடந்த சர்ச்சையை குறித்து பேசினார்.
அது முற்றிலும் தவறு!
அவர், “நான் கர்நாடகாவில் ப்ரோமோஷன் செய்த அன்று எந்த பந்தும் இல்லை. ப்ரோமோஷனில் இடையூறு செய்தவர்களால் சர்ச்சை ஏற்பட்டது, ஆனால் அதற்கு பிறகு பலரும் எனக்காக ஆதரவு தெரிவித்தனர். அந்த சர்ச்சை குறித்து என்னிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர்கள் சிவராஜ்குமாரும் பிரகாஷ் ராஜும் தெரிவித்து இருந்தனர். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் அவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
அவர்கள் மிகப்பெரியவர்கள், அவர்கள் மன்னிப்பை நான் ஏற்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் அந்த சர்ச்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அவர்களுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் அனைவருமே ஒரே குடும்பம் தான்.
இந்த சர்ச்சை குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்த போதிலும் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. அது முற்றிலும் தவறு. சித்தா படத்தை நானே தான் தயாரித்து உள்ளேன். ஒரு தமிழ் தயாரிப்பாளருக்காக தமிழ் தயாரிப்பாளர் சங்கம் பேசியிருக்க வேண்டும்” என்று சித்தார்த் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
சித்தா படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தற்போது திரையரங்குகளில் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சீனியர்களின் கனவில் மண்ணைப் போட்ட அண்ணாமலை: கமலாலய விசும்பல்!
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!