‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 4ம் தேதி திரையிடப்பட்டது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்ற ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்தார்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி(39) உயிரிழந்தார். அவரது மகன்(8) தற்போது கவலைக்கிடமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து, அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ரேவதியின் கணவர் பாஸ்கர் தெலுங்கு ஊடகங்களிடம் கூறுகையில், ‘அல்லு அர்ஜுன் மீது தவறு இல்லை. எனக்கு அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. நான் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்று அல்லு அர்ஜுன் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே, புஷ்பா பட வெற்றி விழாவில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை. எனினும், டிக்கெட் விலையை அதிகரிக்க அரசு அனுமதி அளித்ததற்காக நன்றி என்று பேசினார். அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கைக்கு திரையுலகினரும் பல அரசியல் கட்சி தலைவர்களும் முதல்வர் ரேவந்த் ரெட்டியை குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜாமீனில் வெளி வந்த அல்லு அர்ஜுன் தான் சட்டத்தை மதிப்பவன் என்றும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?
-எம்.குமரேசன்