வி ஜே அர்ச்சனா அவருடைய கணவரோடு ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்து முடிவு எடுத்ததாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகத் தனது கெரியரை தொடங்கியவர் வி ஜே அர்ச்சனா. தொடர்ந்து இவர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் ஷோ, பிரபலங்களை பேட்டி எடுப்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய மகளோடும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் , சமீபத்தில் வி ஜே அர்ச்சனா ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய வீட்டில் தற்போது நடக்கும் சூழ்நிலையைப் பற்றி உருக்கமாக கூறி இருக்கிறார்.
அந்த பேட்டியில் பேசிய அவர் “நானும் என் கணவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். அதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை வந்தது. ஒரு மாதம் முன்பு நாங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்தோம்.
15 நாட்கள் முன்பு என் கணவருக்கு திடீரென விசாகப்பட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் போட்டனர். அப்போது எங்கள் மகள் ஸாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார்.
நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு இன்னொருவர் உங்களால் வாழ முடியுமா? என்பதை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். அதன் பின்னர் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு, 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி காதலித்தோமோ அதேபோல் தற்போதும் காதலித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாஜக அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்: ஜே.பி. நட்டா