தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்: நடிகை அஞ்சலி

சினிமா

ஒரு நபருடன் ஏற்பட்ட தவறான உறவால் பட வாய்ப்புகளை இழந்தேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனையடுத்து அவர் அங்காடித்தெரு படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதைக் கவர்ந்து பிரபல நடிகைகள் பட்டியலில் இணைந்தார் .

இதனையடுத்து அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, தரமணி எனப் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஜெய்யுடன் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ’பலூன்’ போன்ற படங்களில் நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாகவும் பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

toxic relationship actress anjali interview

மேலும், கடந்த இரண்டு வருடங்களாகச் சரிவரத் திரையுலகில் கவனம் செலுத்தாமல், நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாகக் கூறப்பட்டது.

இதற்குக் காரணம் தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பது தான் என சில கிசுகிசு எழுந்த நிலையில், தற்போது முதல் முறையாக டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து ஊடகம் ஒன்றுக்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.

இந்த தகவல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

113 முறை விதிமீறினார் ராகுல்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎஃப் பதில்!

கொடநாடு வழக்கு: கூடலூரில் விசாரிக்கிறது சிபிசிஐடி!

+1
0
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *