நடிகர் கருணாஸ் நந்தா திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவருக்கு திண்டுக்கல் சாரதி போன்ற படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் கலக்கினார். வெற்றி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கருணாஸ் சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியுள்ளார்.
தன்னுடைய சொந்த நிலத்தில் இயற்கை விவசாயத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், ”தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள அவர், நான் சினிமாவில் சம்பாதிச்ச பணத்தை சினிமாவிலேயே இழந்தேன். எல்லாரும் கமலஹாசனை தான் ரொம்ப ரிஸ்க் எடுக்கிறார் என்பார்கள். ஆனால் நான் அவரை விட அதிகமாக ரிஸ்க் எடுத்துள்ளேன். கமல்ஹாசன் அவருடைய லெவலுக்கு ரிஸ்க் எடுத்தார் என்றால், அவர விட ரொம்ப ரொம்ப கம்மியான சக்தி உடைய நான் அவரை விட அதிகமா ரிஸ்க் எடுத்துள்ளேன்.
48 படம் டிஸ்ட்ரிபியூட் செய்து இருக்கிறேன். 4 படம் நானே சொந்தமா தயாரிச்சிருக்கேன். இன்னொருத்தர் எடுத்த படம் கற்றது தமிழ். அந்த படத்தை நான் வாங்கி ரிலீஸ் பண்ணினேன். நான் அன்னைக்கு ரிஸ்க் எடுத்து ரிலீஸ் பண்ணலன்னா அந்த படத்தை பற்றி தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்குமா? சம்பாதிச்ச பணத்தை எல்லாம் சினிமாவில் போட்டேன். ஒரே நாளில் நான் கடன்காரன் ஆனேன். கடன்காரங்க எனக்கு போன் பண்ணும் போது நான் போனை எடுத்து பேசி சமாளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”இனி எதிலும் கால தாமதம் ஏற்படாது” : டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் வாக்குறுதி!
வாழை படத்தில் ஒரே ஒரு குறை கண்டுபிடித்த ப்ளு சட்டை மாறன்… அது என்ன?