கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!

சினிமா

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டார். சினிமா உலகில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ஜெயம் ரவி கோவாவில் இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல பாடகி கென்னிஷாவுடன் சேர்ந்து ஹீலிங் சென்டர் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி கென்னிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவலை இருவருமே மறுத்துள்ளனர். இந்த நிலையில், தான் விவாகரத்து செய்தது குறித்து ஜெயம் ரவி, ஆர்.ஜே. ஷாவிடம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து ஷா கூறியதாவது,

“விவாகரத்து குறித்து எதுவும் தெரியாது என ஆர்த்தி சொல்வது எல்லாம் பொய். இந்த முடிவு எடுத்த பிறகு நான் விவாகரத்து நோட்டீசை அவர்களுக்கு இரண்டு முறை அனுப்பினேன் . அதை பெற்று கொண்டு கையெழுத்து போட்ட பிறகு தான், நான் என் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.

நான் என் குழந்தைகளை தனியாக விட்டு சென்றதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். என்னுடைய ஒரு மகன் பிறந்தநாள் அன்று நான் ஹோட்டலில் அவர்களுக்காக காத்துகொண்டு இருந்தேன் . ஆனால் அதை தெரிந்து கொண்ட ஆர்த்தி என் குழந்தைகளை கூட்டி கொண்டு இலங்கை சென்று விட்டார்.

எனக்கு திருமணமாகி  15 ஆண்டுகளாகிறது. ஆனால், எனக்கென்று தனியாக வங்கியில் கணக்கு கிடையாது. நான் எந்த செலவு செய்தலும் அதற்கு கணக்கு கேட்பார். ஆனால், அவரோ இஷ்டம் போல செலவு செய்வார். எனக்கும் அவருக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட்தான் இருக்கும். கார்டு ஸ்வைப் செய்தால்  மெசேஜ் அவங்களுக்குதான் போகும்.

வெளிநாட்டுக்கு போனா, அங்க போய் செலவு செய்தா என்கிட்ட  கேட்க மாட்டாங்க. ஆனா, என்ன செலவு செய்தார்னு  என்னோட  அசிஸ்ட்டன்ட் கிட்ட கேட்பாங்க. ஒரு கட்டத்தில் என்கிட்ட கார்டு கூட கொடுக்க கூடாதுனு முடிவு செய்தாங்க. 6 வருஷமா என்கிட்ட வாட்சப் கூட  கிடையாது. சந்தேகப்பட்டு கிட்டே இருப்பாங்க. இன்ஸ்டா அக்கவுண்ட் கிடையாது.

எனக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் இல்லாமல் போனதால் தான் இந்த முடிவு எடுத்தேன். என் மாமியார் என்னை வைத்து எடுத்த 3 படமுமே லாபம்தான் கொடுத்துருக்குது. ஆனால், என்கிட்ட லாஸ்னு சொன்னாங்க. இதுதான் எனக்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியது” என்று ஜெயம் ரவி சொன்னதாக ஷா கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல்” – முத்தரசன் ரியாக்‌ஷன்!

5 தயாரிப்பாளர்களுக்கு நான் தேவையாம் – மலையாள நடிகையிடம் ஜொள்ளு விட்ட தமிழ்ப்பட தயாரிப்பாளர்!

+1
3
+1
2
+1
0
+1
4
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *