’ஹலோ வுமனைசர் என் கிட்ட நிறைய செருப்பு இருக்கு’: விஷாலுக்கு ஸ்ரீரெட்டி அதிரடி பதில்!

சினிமா

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு தருவதற்காக பாலியல் இச்சைக்கு அழைத்ததாகக் கூறி, தெலுங்கு நடிகர் சங்கத்தின் முன் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் இயக்குநர் தேஜா உள்ளிட்டோர் மீது புகார் கூறிய அவர், தமிழில் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த் மற்றும் சுந்தர் சி மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பது எனக்கு தெரியும் என்று தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி ஏற்கனவே பதிவிட்டிருந்தார். தனது தொழில் மீதும், தாயார் மீதும் சத்தியம் செய்துள்ள ஸ்ரீரெட்டி, தான் பொய் சொல்லவில்லை என்‌றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை எழ, இந்த விவகாரம் குறித்து பேசிய நடிகர் விஷால், ’அட்ஜஸ்ட்மென்டுக்கு யாராவது அழைத்தால் அவர்களை செருப்பால் அடியுங்கள்’ என்று பதிலளித்திருந்தார். மேலும், ’என் மீது பாலியல் குற்றச்சட்டு கூறும் நடிகை ஸ்ரீரெட்டியை யாரு என்றே தெரியாது’ என்றும் விஷால் கூறியிருந்தார்.

இதற்கு எக்ஸ் பக்கத்தில்  பதிலடி கொடுத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி,  ”என்னிடத்தில் நிறைய செருப்பு உள்ளது. உங்களுக்கு வேண்டுமா? என்று கேட்டுள்ளார். மேலும், நீங்கள் ஒரு பெண்ணை பற்றி பேசும் போது, உங்கள் நாக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.செய்த கர்மா ஏற்கனவே உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன. உங்களுக்கு ஒன்று வேண்டுமா என தெரியப்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

ரூ.3 கோடி கடன்: வட்டியுடன் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *