எனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கும் நடிகைகளில் சமந்தாவிற்கு முக்கிய இடமுண்டு.
சமந்தா மயோசைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றார். பின்னர் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த இவர் கடந்த ஓராண்டாக சில படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
முதலில் விஜய் தேவரகொண்டாவுடன் “குஷி” என்ற படத்தில் நடித்தார். பின்னர், ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-ன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடிகை சமந்தா நடித்தார். பிறகு சிறிது நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப் போவதாகக் தெரிவித்திருந்தார்.
தற்போது, ஓய்விலிருந்து மீண்டும் சில திரைப்படங்களில் நடிக்க நடிகை சமந்தா கமிட்டாகி உள்ளார். இந்நிலையில், ‘ஐஎம்டிபி’யின் 100 பிரபலங்கள் பட்டியலில் சமந்தா 13 வது இடத்தைப் பிடித்திருந்தார்.
இதற்காக பலரும் நடிகை சமந்தாவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக பேசிய சமந்தா, “எனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக உள்ளது. அனைத்து துறைகளில் உள்ளவர்களும் தங்களை மற்றவர்களை ஒப்பிட்டு கொள்வார்கள். நானும் அப்படித்தான்.
மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நானும் அவர்களை போல் முன்னேற கடினப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இனியும் நினைப்பேன். ‘ஐஎம்டிபி’யின் 100 பிரபலங்களில் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
நிறைய நல்ல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. இனிமேல் இன்னும் கடினமாக உழைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகர்.. உருவானது ’அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’!
நீட் தேர்வில் முறைகேடு… விசாரணை குழு அமைக்கப்படும் : சஞ்சய் மூர்த்தி