வெந்து தணியாத கௌதம் வாசுதேவ் மேனன்: காரணம் ப்ளூ சட்டை மாறன்

சினிமா

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் அண்மையில் நடந்தது அதில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு ‘ இந்த படத்தில் வேலை செய்த எல்லோரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இருந்த நிறை குறைகளை என்னிடம் சுட்டிகாட்டினார்கள்.

கடந்த காலங்களில் என்னை உருவ கேலி செய்தவர்களால் இப்போது அதை செய்ய முடியாது இந்த படத்தில் நான் அவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவில்லை.

உருவ கேலி செய்பவர்கள் யார் என்றுஅவர்களுக்கே தெரியும். ஒரு படத்தை விமர்சனம் செய்யுங்கள் கேலிசெய்ய வேண்டாம்.

அதே நேரத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் யாரும் உருவ கேலி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

I feel Blue Sattai Maran come down and do something Gautham

கடந்த காலங்களில் சிம்புவை உருவ கேலி செய்தவர் வேறு யாரும் இல்லை, சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் தான்.

இவர் சினிமா விமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை கேலி செய்து வருவதாக இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

அண்மையில் கூட நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படத்தை கடும் விமர்சனம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

I feel Blue Sattai Maran come down and do something Gautham

ஒரு கட்டத்தில் பார்த்திபன் எடுத்தது உலகனின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமே கிடையாது என்றும் அதற்கு முன்பாகவே அது போன்ற திரைப்படங்கள் வந்திருக்கிறது என்றும் கூறினார்.

இது பார்த்திபனுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் வார்த்தை போராக மாறியது.

அவர்களுக்கு இடையே நடந்தது வெறும் வார்த்தை போர்தான் ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறனை ’இறங்கி எதாவது செய்யலாமானு தோணுது” என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

மேலும், எந்த ஒரு படத்தையையும் விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அசிங்க படுத்த வேண்டாம் என்று கூறினார்.

I feel Blue Sattai Maran come down and do something Gautham

அதற்கு ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகர் சிம்புவையும், கவுதம் வாசு தேவ் மேனனையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன் என்றும்,

கடந்த காலங்களில் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் பெண்களை உருவ கேலி செய்யும் விதமாக பல பாடல்கள் உள்ளன என்றும்,

அந்த பாடல்களின் வரிகளையும் தற்போது அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“வைரமுத்துவை விட திறமையானவர்கள் வருகிறார்கள்”: மணிரத்னம்

பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக நானே வருவேன்: தாணுவின் திட்டம் என்ன?

+1
1
+1
3
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.