நடிகை சங்கீதா கிரிஷ் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சி நடுவராகவும் கலந்து கொள்கிறார். பிதாமகன், உயிர் போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு தனித்துவமான அடையாளத்தை கொடுத்திருந்தன. ஆனால் சமீப காலமாக அவர் தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து சங்கீதா சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் நான் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழை விட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும்.
அதற்கு காரணம் எனக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது. எனக்கு தமிழை பிடிக்காது என்று பேசுவதை கேட்டு தமிழ் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், உண்மையை நான் கூறிதானே ஆக வேண்டும். உண்மையை சொன்னால், தமிழில் நடிக்க நான் யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை. தமிழ் திரையுலகில் இருந்து எனக்கு போன் செய்து இந்த படத்தில் நீங்க நடிக்கனும்னு கேட்டு, சம்பளத்தையும் சொல்லுவாங்க. என்னை நடிக்க கேட்குறப்போ, நான்தானே சம்பளத்தை பிக்ஸ் செய்ய வேண்டும். நான் என்னமோ கரண்ட் பில் கட்ட கூட வழியில்லாமல் இருப்பது போல ட்ரீட் பண்ணுவாங்க என்று தெரிவித்திருந்தார்.
மேலும், எனக்கு அவங்க உரிய மரியாதையை கொடுக்கணும். ஆனால், அவர்கள் அதை கொடுப்பது இல்லை. அதனால்தான் நான் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கிறது இல்லை” என கூறியுள்ளார்.
இதையடுத்து, ஒட்டுமொத்தமாக எனக்கு தமிழை பிடிக்காது என்று குறை சொல்லாதீர்கள் என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விலை உயராத தங்கம்…நகை பிரியர்களுக்கு நற்செய்தி!
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்! – யார் இவர்?