எனது மகளுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா செப்டம்பர் 19 அதிகாலை தற்கொலை செய்துகொண்டார்.
12ஆம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஓராண்டாக மன அழுத்தத்திற்காகச் சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்ட மீராவின் உடல் நேற்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தனது மகளின் மறைவால் மீளா துயரில் இருக்கும் விஜய் ஆண்டனி இன்று (செப்டம்பர் 21) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“அன்பு நெஞ்சங்களே,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள்.
அவள் இப்போது, இந்த உலகைவிடச் சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
பிரியா
6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி!
சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?: தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு!