ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் டீசர் வெளியானது: ஸ்பெஷல் என்ன?

சினிமா

ரித்திக் ரோஷனின் வார், ஷாருக்கானின் பதான் என தொடர்ந்து இரண்டு மெகா பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். தற்போது இவரது இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஃபைட்டர்.

இந்த படத்தில் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வியோகாம் ஸ்டுடியோஸ் மற்றும் மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து ஃபைட்டர் படத்தை தயாரித்துள்ளது.

தற்போது ஃபைட்டர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் Fighter Pilot கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கேரக்டரின் பெயர் Patty. ஃபைட்டர் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள Fighter Jet ஆக்சன் காட்சிகள் மற்றும் படத்தின் VFX காட்சிகள் செம மிரட்டல்.

ஃபைட்டர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதே இந்த படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் டைகர் vs பதான் படத்திற்கு பின் ஃபைட்டர் 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஃபைட்டர் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெற்றிமாறன் இயக்கம், அட்லி வசனம்: ஜிவி பிரகாஷ் செம அப்டேட்!

IPL2024: தோனியின் இடத்தை நிரப்ப… 3 வீரர்களை டார்கெட் செய்யும் சென்னை அணி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *