உலகின் கவர்ச்சியான ஆண்கள் பட்டியலை டெக்னோ ஸ்போர்ட் நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தென்கொரியா பி.டி.எஸ் வி குழுவின் பிரபல பாடகர் கிம் தையூங் முதலிடத்தை பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் இரண்டாவது இடத்தையும் பிரிட்டனை சேர்ந்த நடிகர் ராபர்ட் பெட்டின்சன் 3வது இடத்தையும் பெற்றுள்ளார்.
கனடா நடிகரும் மாடலுமான நோவா மில்ஸ் 4வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் 5வது இடத்தை பெற்றுள்ளார். பாலிவுட்டில் இவருக்கு ‘துருக்கிய கடவுள்’ என்ற செல்லப் பெயரும் உண்டு.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இவரின், இளமையான தோற்றம் அவருக்கு உலகின் ஹேண்ட்சம் ஆண்களில் முதல் 10 பேருக்குள் இடத்தை பெற்று தந்துள்ளது.
பாலிவுட் ஸ்டார் கிறிஸ்ட் எவான்ஸ் 6வது இடத்தை பெற்றுள்ளார். பிரிட்டன் நடிகர் ஹென்ரி காவில் 7வது இடத்தை பிடித்துள்ளார். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ருஸ் 9வது இடத்தை பிடிக்க, 10வது இடத்தில் பிரட்லி கூப்பர் உள்ளார்.