how to fing deepfake videos?

ராஷ்மிகா.. கத்ரீனா… டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

சினிமா

அண்மை காலமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், மனிதர்களின் பணிகளில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது, ஒரு தனி மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு நடந்த நிகழ்வு. how to find deepfake videos?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவின் AI டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து, பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்த நிகழ்வு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ராஷ்மிகா, “இன்று ஒரு பெண்ணாகவும் ஒரு நடிகையாகவும், எனக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தில் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் எனக்கு ஆதரவாக இருந்ததால், என்னால் இதை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், நான் ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவியாக இருக்கும்போது, எனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், அதை எப்படி எதிர்கொண்டிருப்பேன் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இது மாதிரியான சம்பவங்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்றும், இதில் ஈடுபடுவோருக்கு 3 வருடம் சிறை, 1 லட்சம் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என மத்திய அரசு நினைவுகூர்ந்திருந்தது.

முன்னதாக, இம்மாதிரியான சம்பவங்கள் குறித்து ஒரு நபர் புகார் தெரிவித்தால், சமூக வலைத்தளங்கள் 36 மணி நேரத்தில் அந்த வீடியோவை அகற்ற வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரங்களும், அந்த நபருக்கு உள்ளது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்வீட் செய்திருந்தார்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே, அதே டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை தவறாக சித்தரித்து புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரை நட்சத்திரங்களுக்கு இவ்வாறு நடப்பது இது முதன்முறை அல்ல. ஹாலிவுட்டில் பிரபலமடைந்த நடிகை எம்மா வாட்சன், டைலர் ஸ்விப்ட், நடாலி போர்ட்மன் உள்ளிட்டவர்களின் படங்களை தவறாக சித்தரித்து, ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஒரு வீடியோ டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிலையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முகத்தில் உள்ள நுணுக்கங்களை மிக நெருக்கமாக ஆராய்ந்து, ஒரு வீடியோ டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறியலாம் என தெரிவித்துள்ளது.

1) முதலாவதாக, கன்னம் மற்றும் நெற்றியில் வழக்கத்திற்கு மாறான மென்மை அல்லது அதிகப்படியான சுருக்கங்கள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

2) கண் மற்றும் கண் புருவத்தை கவனிக்க வேண்டும். அந்த வீடியோவில் உள்ள ஒளி ஆதாரங்களுக்கு ஏற்ப, கண் மற்றும் புருவங்களில் நிழல் விழுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3) அசாதாரண கண் அசைவுகள் மூலமாகவும் டீப் ஃபேக் வீடியோக்களை கண்டறியலாம்

4) அசாதாரண உடல் மற்றும் முக அமைப்பு ஆகியவற்றையும் ஆராய வேண்டும்

5) ஒருவேளை, அந்த நபர் கண்ணாடி அணியும் நபராக இருந்தால், அதில் ஏற்படும் கூசொளியை வைத்தும் டீப் ஃபேக் வீடியோவை கண்டறியலாம் என தெரிவித்துள்ளது.

6) மேலும், ஆண்களுக்கு அவர்களின் மீசை மற்றும் தாடியை ஆராய்ந்து டீப் ஃபேக் வீடியோவை கண்டறியலாம்.

7) டீப் ஃபேக் செய்யப்படும் வீடியோகாலில், உதட்டு அசைவு சரியாக இருக்காது என்றும், அதை கவனித்தும் டீப் ஃபேக் வீடியோக்களை கண்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீப் ஃபேக் வீடியோக்களை கண்டறிய உதவும் கருவிகள்

1. சென்டினல் (Sentinel)

2. இன்டெலின் ரியல் டைம் டீப் ஃபேக் டிடெக்டர் (Intel’s Real-Time Deepfake Detector)

3. வீ வெரிஃபை (WeVerify)

4. மேக்ரோசாப்ட்டின் வீடியோ ஆதென்டிகேட்டர் கருவி (Microsoft’s Video Authenticator Tool)

5. டீப் ஃபேக் டிடெக்சன் (Deepfake Detection Using Phoneme-Viseme Mismatches) how to find deepfake videos?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

போர் கண்ட சிங்கமாய் மேக்ஸ்வெல்… ஆஸ்திரேலியாவின் மறக்கமுடியாத வெற்றி!

வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0