ஒரு கிலோ தங்கம் கடத்தினால் 1 லட்சம் கமிஷன்… நடிகை ரன்யாவின் சம்பாத்தியம் எவ்வளவு?

Published On:

| By Kumaresan M

கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடத்தில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், அவரை பற்றி பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரன்யா ராவ் வடக்கு கர்நாடகத்தை சேர்ந்த ஜத்தீன் ஹக்கேரி என்பரை 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். பெங்களுருவிலுள்ள தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டலில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு, தன்யா ராவ் தன் வளர்ப்பு தந்தையான டி.ஜி.பி ராமச்சந்திரன் ராவை விட்டு விலகியுள்ளார். how Ranya get into gold smuggling?

பின்னர், லாவேல்லா சாலையில் ஆடம்பரமான பங்களாவை வாங்கி குடியேறியுள்ளனர். திருமணத்துக்கு பிறகுதான், அவர் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், ரன்யாவின் கணவர் ஜத்தீன் ஹக்கேரியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 30 முறை ரன்யா ராவ் துபாய் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் கிலோ கணக்கில் தங்க நகைகளை உடலில் பெல்ட் போல அணிந்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

ஒரு கிலோ தங்க நகையை துபாயில் இருந்து இந்தியாவுக்கு கடத்தினால் ஒரு லட்ச ரூபாய் கமிஷனாக கிடைக்குமாம். அந்த வகையில் , ஒரு முறை துபாய் சென்று வந்தால் ரன்யாவுக்கு 13 லட்சம் சம்பாத்தியம் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு என்று பார்த்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.

ரன்யா துபாய் சென்றதும் விமான நிலையத்தில் வைத்துதான் தங்கக்கட்டிகள் கைமாறுமாம். உடனடியாக, கழிவறைக்கு சென்று தன் உடலில் பெல்ட் போல கட்டிக் கொள்வாராம். how Ranya get into gold smuggling?

ஒவ்வொரு முறை துபாய் சென்று விட்டு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வந்திறங்கியதும் டி.ஜி.பி மகள் என்று கூறி கெத்து காட்டி சோதனையில் இருந்து தப்பித்ததாகவும் சில நேரங்களில் , போலீஸ் தங்களது எஸ்கார்ட் வாகனங்களிலேயே அவரை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டதாக கன்னட பத்திரிகையான ப்ராஜாவானி செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share