பூர்ணிமா பிக்பாஸில் சம்பாதித்த மொத்தத் தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூபாய் 16 லட்சம் பணத்துடன், பூர்ணிமா வெளியேறியது குறித்துத்தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு பிக்பாஸ் பணத்தொகையை உயர்த்த, புத்திசாலித்தனமாக பூர்ணிமா பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டார்.
டைட்டில் வெல்லும் போட்டியாளருக்கு ரூபாய் 50 லட்சம் பணம் கிடைக்கும். ஆனால் இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு அந்த அளவுக்கு புகழோ, பணமோ கிடைக்காது.
இதை மனதில் வைத்துத்தான் பூர்ணிமா இந்த முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் நாளொன்றுக்கு அவரின் சம்பளம் ரூபாய் 15 ஆயிரமாக இருந்துள்ளது.
இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் பிக்பாஸ் வீட்டில் 94 நாட்களுக்கு மேல் இருந்ததற்கான சம்பளம், பணப்பெட்டி என மொத்தமாக பூர்ணிமாவிற்கு ரூபாய் 30 லட்சம் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் வின்னருக்கு ரூபாய் 5௦ லட்சம் கிடைக்கும். ஆனால் இறுதிவரை செல்லாமலேயே தன்னுடைய ஸ்மார்ட்டான முடிவால் நல்ல ஒரு தொகையை, பூர்ணிமா பிக்பாஸ் மூலம் சம்பாதித்து இருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்
உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு: ஸ்டாலினுக்கு வைகோ வலியுறுத்தல்!