பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்களிடம் நடிகர் விக்ரம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர் விக்ரம், கார்த்திக், த்ரிஷா ஆகியோர் சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் பார்த்தனர்.
படத்தை ஐமேக்ஸ் தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்த விக்ரம், ரசிகர்களிடம் படம் பார்த்து விட்டீர்களா அல்லது இனிமேல் தான் பார்க்க போகிறீர்களா என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள் அனைவரும் படம் பார்த்துவிட்டதாக தெரிவித்தனர்.
படம் எப்படி இருக்கிறது என்று விக்ரம் கேட்டபோது படம் அருமையாக இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
பின்னர் ரசிகர்கள் அனைவரும் நடிகர் விக்ரமுடம் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுந்தர சோழ மன்னரின் முதல் புதல்வன் ஆதித்த கரிகாலன். நந்தினி தேவியின் இளம் வயது காதலனான, ஆதித்த கரிகாலன் நந்தினியின் முதல் கணவர் வீர பாண்டியனை கொன்று விடுகிறார்.
தன்னுடைய கணவனை கொன்ற ஆதித்த கரிகாலனையும் அவரது சோழ சாம்ராஜ்யத்தையும் அழிப்பதற்காக வயதானவரை திருமணம் செய்து கொண்டு தஞ்சைக்கு வருவார் நந்தினி.
நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், விக்ரம் இணைந்து நடித்ததிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன், பெண்களின் செல்வன் ஆக காரணம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கார்கேவுக்காக விலகிய திக் விஜய் சிங்
Ok